தவெக மேடையில் நடனமாடிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நடனமாடியுள்ளார்.
தவெக மேடையில் நடனமாடிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
Published on

தஞ்சை,

தஞ்சாவூர் மாவட்டம் பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக இருந்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா, பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெற்றது. அதன்படி, ஒரத்தநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி விழா மேடையில் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com