தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல்

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
சென்னை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குபின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் விடுமுறை என தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றமில்லை' என்றார்.
Related Tags :
Next Story






