வேன் மோதி பள்ளி மாணவன் சாவு

சாணார்பட்டி அருகே, வேன் மோதி சைக்கிளில் சென்ற மாணவர் பரிதாபமாக இறந்தான்.
வேன் மோதி பள்ளி மாணவன் சாவு
Published on

சாணார்பட்டி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. அவருடைய மகன் சிவா (வயது 14). இவன், சிலுவத்தூர் அரசு உயர்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சிவா, பள்ளி முடிந்து ஊருக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். பண்ணைப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் மில் வேன், சிவாவின் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவா பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com