குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
Published on

பொன்னமராவதி அடுத்துள்ள பொன் புதுவயலை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகன் முகமதுமுசமில் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்த முகமதுமுசமில் கீரனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளான். நேற்று மதியம் பெரியகுளத்தில் குளிக்க சென்றுள்ளான். குளிக்க சென்றவனை காணவில்லை என்று தேடியுள்ளனர். அப்போது குளத்தின் வழியாக சென்றவர்கள் குளத்தில் சிறுவன் மிதப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்றவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் முகமது முசமில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com