பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை..!

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை..!
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவன் ஜீவா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக புளியங்குடியைச் சேர்ந்த நபர், மாணவனை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஜீவாவின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com