பள்ளி மாணவர்கள் சாதனை

விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

மதுரை சகோதயா அமைப்பின் சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கால்பந்து போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். கையுந்து பந்து போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சேர்மன் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மேலாளர் இசக்கி துரை, பள்ளி முதல்வர் மோனிகா டி சோசா, துணை முதல்வர் ஜெய பாக்யா மற்றும் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், சோபியா, சேவியர், பரலோகராஜா ஆகியோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com