பள்ளி மாணவர்கள் சாதனை

மாவட்ட தடகள போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

திருவேங்கடம்:

தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தடகள போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர்.

மேலும் மாணவர்கள் பிரிவில் கலைவாணி பள்ளி அணி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். மூத்தோர் பிரிவில் பிரகாஷ் என்ற மாணவன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 24 மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய -ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com