படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவர்கள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவர்கள்
Published on

சென்னை பிராட்வேயில் இருந்து கண்ணதாசன் நகர் நோக்கி நேற்று முன்தினம் மாலை மாநகர பஸ் (தடம் எண் 64.கே) சென்றது. மூலக்கடை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக சென்றபோது பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பஸ்சில் ஏறி படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதனை கண்டக்டர் துளசிராமன் கண்டித்ததுடன், பஸ்சை நிறுத்தி படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை கீழே இறங்கும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள், அருகில் கிடந்த கல்லை எடுத்து மாநகர பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து கண்டக்டர் துளசிராமன் அளித்த புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com