பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்

நெல்லை டவுனில் பள்ளிக்கூட மாணவர்கள் திடீரென்று மோதிக்கொண்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
Published on

நெல்லை டவுனில் பள்ளிக்கூட மாணவர்கள் திடீரென்று மோதிக்கொண்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

மாணவர்கள் மோதல்

நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு படித்து வரும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பலர் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக டவுன் மேலரத வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 10 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

2 பேர் காயம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தினர். காயம் அடைந்த 2 மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு மாணவர்களின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்தனர். மேலும் மாணவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் டவுன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com