மாணவருடன் இரவில் அந்தரங்க பேச்சு: பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி ஆசிரியை

கருத்து வேறுபாடு காரணமாக அவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மாணவருடன் இரவில் அந்தரங்க பேச்சு: பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி ஆசிரியை
Published on

திருச்சி, 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி(வயது 40). இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதையொட்டி இவர் துறையூர் பகுதியில் வசித்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக அவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் டியூசன் படித்த 10-ம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

அப்போது இரவு நேரங்களில் அந்த மாணவர், ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும், அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com