பஸ் மோதி பள்ளி ஆசிரியர் பலி

பஸ் மோதி பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
பஸ் மோதி பள்ளி ஆசிரியர் பலி
Published on

துறையூர்:

துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 55). இவர் சிறுநாவலூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு உப்பிலியபுரத்தில் இருந்து துறையூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். சிறுநத்தம் பாலம் வளைவில் வந்தபோது தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தர் ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com