திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 மாணவர்கள் படுகாயம்


திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 மாணவர்கள் படுகாயம்
x

கோப்புப்படம் 

காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். சேதுக்குவாய்த்தானில் தனியார் பள்ளி வாகனமும், அரசு பள்ளிக்கு சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திவாகரன், எழிலரசன், ஶ்ரீமதி ஆகிய மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story