

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவியின் தாயார் தனது கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வேறு ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மாணவிக்கு தாயின் 2-வது கணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் தாயின் 2-வது கணவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவர் மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவர் மீது மாணவியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாயின் 2-வது கணவரை கைது செய்தனர்.