அரசு பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துநர் போக்சோவில் கைது

ஓடும் பஸ்சில் மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த நடத்துநரை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அரசு பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துநர் போக்சோவில் கைது
Published on

அழகியபாண்டியபுரம்,

நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு இயக்கப்பட்டுவரும் அரசு பஸ்சில் தினமும் ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அந்த பஸ்சின் நடத்துநர், அதில் பயணித்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பஸ் ஞானையாபுரம் வந்த போது பஸ்சை சிறைபிடித்தனர். இதைத் தொடர்ந்து நடத்துனரை பிடித்து அடிக்கத் தொடங்கினர்.

இந்த சம்பவம் பற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்துநரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசா நடத்திய விசாரணையில் அரசு நடத்துநர் உண்ணாமலைக்கடையை சேர்ந்த சசி (வயது 54) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com