பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பைக்காரா போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உட்புரூக் பகுதியை சேர்ந்த தயானந்தன் என்ற நவீன் (வயது 25) என்பவர் பள்ளி மாணவியை ஆந்திராவுக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மகளிர் போலீசார் உதவியுடன் மாணவி மீட்கப்பட்டார். விசாரணையில் ஆந்திராவுக்கு அழைத்து சென்று பள்ளி மாணவிக்கு தயானந்தன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தயானந்தனை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com