பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: போக்சோவில் உடற்கல்வி ஆசிரியர் கைது

மாணவிகளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: போக்சோவில் உடற்கல்வி ஆசிரியர் கைது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த ஆதி என்ற சிவபாலன் (வயது 48) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன், உடற்கல்வி பாடவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டு சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com