நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் - கலெக்டர் தகவல்

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாகப்பட்டினம்,

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இந்த சூழலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில்புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு உருவானால் அதற்கு 'பெங்கல்' என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பெங்கல் புயல் உருவாகி வட தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று ( நவ., 28 ) வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மழை இல்லாததால் வழக்கம் போல் இன்று கல்வி நிலையங்கள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

முன்னதாக புதுவை மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com