நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; சுற்றுலா தலங்கள் மூடல்


நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; சுற்றுலா தலங்கள் மூடல்
x
தினத்தந்தி 5 Aug 2025 7:32 AM IST (Updated: 5 Aug 2025 7:55 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் அதிக அளவு மழை பொழிய வாய்ப்புள்ளதால் மண் சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டு உள்ளார். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். இதேபோல் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story