தயார் நிலையில் பள்ளிகள்

பள்ளிகள் திறப்பிற்கு தயார் நிலையில் உள்ளன.
தயார் நிலையில் பள்ளிகள்
Published on

நாளை திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இருப்பினும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் மாணவ-மாணவிகள் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவதை மீண்டும் தமிழக அரசு தள்ளி வைத்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும் (திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

தயார் நிலையில் பள்ளிகள்

இதைத்தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், வகுப்பறையில் இருக்கைகள் வசதி உள்ளிட்ட முன்னற்பாடு பணிகள் நடந்து முடிந்தன.

மேலும் பள்ளிகளில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்கள், கழிவறைகளை சீரமைக்கும் பணிகள், சுவர்கள், கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நிறைவடைந்தன. தற்போது பள்ளிகள் அனைத்து திறக்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு விலையில்லா பாடப்புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு செல்வதற்கு மாணவ-மாணவிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

பள்ளி செல்வதற்கு தேவையான பை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் மாணவ-மாணவிகள் வாங்கி வருகின்றனர். ஆனால் கோடை காலம் முடிந்தும் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com