சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
Published on

சென்னை,

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில்,

கனமழையின் காரணமாகச் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 19.06.2023 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளை ஈடு செய்யும் வகையில் நாளை 22.07.2023 சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாகச் செயல்படுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com