

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. விடுமுறையை முடித்து கல்வி பயிலும் ஆர்வத்துடனும், ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். அந்த செல்வம் ஊற்றெடுக்கும் மணற்கேணி பள்ளிகள் தான். கல்விக் கோயில்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கட்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கட்டும்; அதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்; தமிழகத்தில் கல்வி சிறக்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.