2-ம் தேதி பள்ளிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
சென்னை,
1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 2ம் தேதி (ஜூன்) பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்,பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில்,
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story