

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதில் வேலூரில் தினமும் அதிகபட்ச வெப்பம் பதிவாகிறது. அதாவது 108 டிகிரியை தாண்டி வெயில் பதிவு இருக்கிறது. இன்றைய நாளிலும் மற்ற இடங்களை காட்டிலும் அதிகபட்சமாக 108.86 டிகிரி அங்கு பதிவாகி இருந்தது. இதேபோல், 100 டிகிரியை கடந்து 13 இடங்களில் வெப்பம் பதிவானது. அதன் விவரம் வருமாறு:-
வேலூர் - 108.86 டிகிரி (42.7 செல்சியஸ்)
திருத்தணி - 107.96 டிகிரி (42.2 செல்சியஸ்)
ஈரோடு - 106.16 டிகிரி (41.2 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 105.08 டிகிரி (40.6 செல்சியஸ்)
கரூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)
தர்மபுரி - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)
நாகப்பட்டினம் - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
சேலம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
நாமக்கல் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
கடலூர் - 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)
தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம் - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)