பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள புதூர் ஆற்றங்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை. சம்பவத்தன்று இவரது கோழி பக்கத்து வீடான ஆனந்த் (வயது 40) என்பவர் வீட்டில் மேய்ந்தது. இதையடுத்து அவர், கோழி மீது கல்லை வீசினார். இதைப்பார்த்த பால்துரையின் மகள் பொன்செல்வி (28) தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்த், பொன்செல்வியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com