பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் குமார் மனைவி ராசாத்தி (வயது 43). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகனுக்கும் (50) நிலத்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று ராசாத்தி ஊருக்கு அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு முருகன், அவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் அனிதா (21) ஆகியோர் வந்து, எங்கள் மீது ஏன் போலீசில் புகார் செய்தாய்? என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முருகன், ராஜேஷ்வரி, அனிதா ஆகியோர் ராசாத்தியை தலை முடியை இழுத்து தாக்கியதாகவும், அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராசாத்தி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com