ஐகோர்ட்டு வக்கீலுக்கு அரிவாள்வெட்டு:மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு

ஐகோர்ட்டு வக்கீலுக்கு அரிவாள்வெட்டு:மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை,

சென்னை வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் மணிமாறன். ஐகோர்ட்டு வக்கீல். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 12.7.2016 அன்று சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் அறையில் இருந்த மணிமாறனை, அவரது மகன் ராஜேஷ் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மணிமாறன் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை ஐகோர்ட்டு போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி பாண்டியராஜ் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் கலைச்செல்வன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேஷ் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com