எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சேரன்மாதேவி:

பாலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, புறநகர் மாவட்ட துணைத்தலைவர் முல்லை மஜித், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஹயாத் முகம்மது, மாவட்ட பொதுச்செயலாளர்கள் களந்தை மீராசா, சிராஜ், பொருளாளர் இளையாராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில், பத்தமடை நகர தலைவர் ஷெரிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com