450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் கிடந்த சாக்குப்பையில் இருந்த சுமார் 200 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையோடு சேர்ந்த வன உயர் இலக்கு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடல் அட்டைகளை பிடித்து வந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் கடற்கரை ஓரத்தில் இருந்து சுமார் 250 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com