

வேதாரண்யம்:
வேதாரண்யம் வனச்சரகம், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அறிவுரையின்படி ஆற்காட்டுதுறை பகுதியில் கடல் பசு பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம், மற்றும் கடல்சார் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்தார்கள் ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர் இமயா முருகையன். மீன்வளத்துறை ஆய்வாளர் நடேஷ் ராஜா, கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மீனவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வனத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கடல் பசுவை பாதுகாப்பது குறித்தும், இதன் மூலம் மீனவர்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. முடிவில் வனவர் பெரியசாமி நன்றி கூறினார