நாகையில் கடல் சீற்றம்: 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகையில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால் 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகையில் கடல் சீற்றம்: 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

நாகை,

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இன்று 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com