திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்

கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பவுர்ணமி தினமாகும். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளம் வரை கரையில் இருந்து கடல் 80 அடி உள்வாங்கி உள்ளது.

இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கி உள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க சற்று சிரமம் அடைந்துள்ளனர். மேலும் ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com