கொற்கை துறைமுகம் குறித்த கடலடி ஆய்வு அடுத்த ஆண்டு தொடங்கும்; தொல்லியல் துறை ஏற்பாடு

கொற்கை என்பது இந்தியக் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள மிக முக்கியமான சங்க காலத் துறைமுகங்களில் ஒன்றாகும்.
தொல்லியல் துறை ஏற்பாடு
கொற்கை துறைமுகம்
Published on

சென்னை,

பண்டைய கொற்கை துறைமுகம் குறித்த கடலடி சோனார் ஆய்வு அறிக்கை மற்றும் பூம்புகார் குறித்த விரிவான கடலடி ஆய்வு அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மாநில அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பிக்கவுள்ளது.

கொற்கை துறைமுகம்

கொற்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டவுடன், பண்டைய துறைமுகத்தின் தொல்லியல் சான்றுகளைத் தேடுவதற்காகக் கொற்கையில் கடலில் மூழ்கித் தேடும் ஆய்வுகள் தொடங்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் விரிவான பக்கவாட்டு சோனார் ஆய்வு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டதாகவும், கடலடியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளின் போது

சேகரிக்கப்பட்ட தரவுகளைத் துறை அதிகாரிகள் தற்போது தொகுத்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பூம்புகார் ஆய்வு அறிக்கை

மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குநர் வி.பி. எதீஷ்குமார் தெரிவிக்கையில், பூம்புகாரில் 3-ம் கட்டக்கடலடி ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும், பூம்புகார் ஆய்வு அறிக்கை மற்றும் கொற்கை சோனார் ஆய்வு அறிக்கை இரண்டையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

நவீன உபகரணங்கள் மூலம் ஆய்வு

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொற்கையில் புவியியல் அடையாள ஆய்வு நடத்தப்பட் டது. கடல் மட்டத்திற்கு அடியில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிவதற்காக சுமல்டி பீம் எக்கோ சவுண்டிங் சைட் ஸ்கேன் சோனார் மற்றும் சப்பாட்டம் ப்ரொபிலர் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன.

சோனார் படங்களை மட்டும் வைத்து பண்டைய கொற்கை துறைமுகத்தின் தடயங்களை முழுமையாக உறுதிப் படுத்த முடியாது என்றும். கடல் தளத்திற்கு அடியில் உள்ள கப்பல் சிதைவுகள் மற்றும் பிற தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்ய கடலில் மூழ்கிச் சோதனை செய்வது அவசியமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முத்து குளிப்புக்குப் புகழ் பெற்ற துறைமுகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் நடைபெற்று வரும் கடலடி ஆய்வு ஆவணப்படுத்துதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொற்கை என்பது இந்தியக் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள மிக முக்கியமான சங்க காலத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

ரோமப் பேரரசு மற்றும் பிற வெளிநாடுகளுடன் விரிவான கடல் வணிகம் நடத்திய பாண்டியர்களின் துறை முகமாகவும். முத்து குளிப்புக்குப் புகழ் பெற்றதாகவும் இது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலடி ஆய்வு

கடந்த கால அகழ்வாராய்ச்சிகளின் போது சங்கு வளையல்கள் செய்யும் பட்டறைகள் மற்றும் முத்துச்சிப்பிகள் பதப்படுத்தும் மையங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொற்கையில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ள கடலடி ஆய்வு, பண்டைய துறை முகத்தின் கடல்சார் வரலாற்றையும் வணிக வலைப்பின்னலையும் புனரமைக்கப் பெரிதும் உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com