சென்னையில் 125 கடைகளுக்கு சீல் - தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 125 கடைகளுக்கு சீல் - தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னையில் 15 மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக் கூடிய தொழில் மற்றும் சொத்து வரியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com