சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைப்பு

சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைப்பு
Published on

சுரண்டை:

டெபாசிட்டுக்கு அதிக வட்டி மற்றும் வட்டியில்லாத நகைக்கடன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுரண்டை மற்றும் சேர்ந்தமரத்தில் நகை அடகுக்கடை நடத்தி வரும் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த நகை அடகு கடைகளுக்கு சென்று சோதனையிட்டு 'சீல்' வைத்தனர். பின்னர் அதன் உரிமையாளரை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com