அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல்

தியாகதுருகத்தில் அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் உரிமையாளர்கள் 2 பேர் கைது
அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல்
Published on

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பஸ் நிலையம் பகுதியில் அனுமதியின்றி மதுபார் இயங்கி வருவதாக கோட்டாட்சியர் பவித்ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுகன்யா, தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே மலைபாதை செல்லும் வழியில் உள்ள தனியார் மதுபாருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர். மகன் ரகுபதி(வயது 28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் சுரேஷ்(38) ஆகியோர் அனுமதியின்றி பார் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மது பாரை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதன் உரிமையாளர்களான ரகுதி, சுரேஷ் ஆகிய இருவரையும் தியாகதுருகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com