சீமான், நா.த.க. பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு - திருச்சி எஸ்.பி. வருண்குமார் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் வருண்குமார் ஐ.பி.எஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகித்து வருகிறார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து தானும், தனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் இணைய உரையாடல்களில் இருந்து நானும், எனது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்.சும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்" என்று அதில் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்திருக்கும் விஷமிகளையும் நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்றும் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பிய கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com