சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - வைரமுத்து

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன்

ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது. இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது. ஆனால் இனி - கழிப்பது இயலாது. வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com