ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் சோதனை; காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம் பழம் சேமிப்பு கிடங்கிலேயே அழிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
கோவை மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் 37 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த கிடங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம் பழம் சேமிப்பு கிடங்கிலேயே அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






