சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சி வகுப்புகள்

பாரதி மகளிர் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சி வகுப்புகள்
Published on

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 978 இடங்களில் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் 17 இடங்களில் எப்ரல் 28ம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று (15-4-2026) நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, துறைமுகம் சட்டமன்ற தொகுதி, பிராட்வே, பிரசாரம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com