மேல்நிலை பொதுத்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் நாளை முதல் வழங்கப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்
Published on

சென்னை,

மேல்நிலைப் பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் சான்றிதழ்கள் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் நாளை முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு மையம்

மேலும், விவரங்களை www.dge.tn.gov. in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை அவர்கள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பின் அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com