சிவகங்கை மாவட்டத்தில் 20 முதல் 31-ந்தேதி வரை 144 தடை: கலெக்டர் ஆகாஷ் உத்தரவு

காளையார்கோவிலில் வரும் 27-ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினமும், பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளன.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகாஷ்.
Published on: 

சிவகங்கை,

மருதுபாண்டியர்கள் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், கலெக்டர் ஆகாஷ் 20-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27-ல் மருதுபாண்டியர் நினைவு தினம்; 31-ல் தேவர் குருபூஜை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் வரும் 27-ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினமும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளன.

144 தடை உத்தரவு

இதனை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், வரும் 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் BNSS சட்டப்பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com