பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள்
Published on

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதிகள் என அனைத்து இடங்களிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போலீசார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். நகரில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் மோப்ப நாய்ப்படை மற்றும் வெடிபொருள் செயலிழக்கும் படை பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com