விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. - விஜய்


விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. - விஜய்
x
தினத்தந்தி 8 May 2025 10:56 AM IST (Updated: 8 May 2025 11:07 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பிளஸ் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.

வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்..

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story