சீமான் மாநாடு.. சாதி வெறியின் எச்சம் - விசிக கடும் கண்டனம்

மாடுகளை மேய்க்கவும், பனை ஏறவும் பார்ப்பனர்களை சீமான் வலியுறுத்துவாரா? என்று வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
சீமான் மாநாடு.. சாதி வெறியின் எச்சம் - விசிக கடும் கண்டனம்
Published on

சென்னை,

வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்றே ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்.

ஆரியக்கோட்பாடான குலக்கல்வித்திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் நடத்தியுள்ளார்.

பார்ப்பனரல்லாத சமூகம் படிக்ககூடாது என்பது தான் சனாதனம். அந்த சனாதனத்தை நிலை நிறுத்த பார்ப்பனக் கும்பலின் பின்னணியோடு இப்படியான மாநாடுகளை நடத்துகிறார் சீமான்.

மாடுகளை பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ். கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.

பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும், குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம்.

அது சரி, மாடுகளை மேய்க்கவும், பனை ஏறவும் பார்ப்பனர்களை வலியுறுத்துவாரா? அல்லது காலம் காலமாய் தொழில் செய்வோரே செய்யணுமா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com