"என்னுடைய அம்மா அற்புதம்மாள் .." மேடையில் சீமான் உருக்கம்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து சீமான் பேசினார்.
"என்னுடைய அம்மா அற்புதம்மாள் .." மேடையில் சீமான் உருக்கம்
Published on

சென்னை,

இன படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூந்தமல்லியில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே நசரத்பேட்டையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஈழ படுகொலை சுவடுகள் என்ற புத்தகத்தையும், ஒலி நாடா ஆகியவற்றை வெளியிட்டார். அப்போது மேடையில் பேரறிவாளன் விடுதலை குறித்து சீமான் பேசுகையில்,

நம்முடைய தாயார், என்னுடைய அம்மா அற்புதம்மாள் அவர்கள் காலகள் தேய தேய நடந்து சந்திக்காத, கரங்கள் பிடித்து கெஞ்சாத தலைவர்கள் எவரும் கிடையாது. அவர் சிந்திய கண்ணீருக்கும், தொடர்ந்து நடத்திய அறப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாக பேரறிவாளினின் வெற்றியை நான் பார்க்கிறேன்.

எண்ணற்ற அரசியல் தலைவர்கள், அரும்பெரும் அறிஞர்கள் இந்த விடுதலைக்காக போராடினர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றியையும், வணக்கத்தையும் செலுத்துவோம். இந்த விடுதலை சாத்தியப்பட்டது பேரறிவாளனின் உழைப்பு. இதனை யாரும் மறுக்க முடியாது. தன் விடுதலையை தானே பெற்றுக்கொண்டான் என்பது தான் உண்மையும் கூட. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com