திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 16 ஈழத்தமிழர்கள் விடுவிப்பு - தமிழக அரசுக்கு சீமான் நன்றி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 16 ஈழத்தமிழர்களை விடுவித்ததற்கு தமிழக அரசுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 16 ஈழத்தமிழர்கள் விடுவிப்பு - தமிழக அரசுக்கு சீமான் நன்றி
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருச்சி, சிறப்பு முகாமில் இருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ந்தேன். நீண்ட நெடு நாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப் போராட்டத்திற்கும், கருத்துப் பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப் பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல, இந்தியச் சட்டத்தின்படி தங்களை அகதிகள் என பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com