

செங்கம்
கிராமசபை கூட்டத்தில் அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அல்லியந்தல் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பார்வைக்கு எந்த ஆவணங்கள் காண்பிக்காமல், பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கோரிக்கை மனுக்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படததால் அதனை கண்டித்து பொதுமக்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாய்ச்சல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.