மரங்களை கடத்திய லாரி பறிமுதல்

மரங்களை கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மரங்களை கடத்திய லாரி பறிமுதல்
Published on

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி காலம் முடிந்த பின்னரும் கருவேல மரங்கள் வெட்டி லாரியில் கடத்தியுள்ளனர். இது சம்பந்தமாக சாலைக்கிராமம் விவசாய சங்க நிர்வாகிகள் ராமன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்தனர். அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி கருவேல மரங்களை வெட்டி கடத்திய லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com