பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சிவகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50 கிலோ அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆய்வின் போது சிவகிரி பேரூராட்சி வரித்தண்டலர்கள் முத்துப்பாண்டி, நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com