தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்

தனியார் பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்
Published on

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவிகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 4 மாணவிகள் பஸ்சில் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பஸ்சின் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சித்ரா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன் மற்றும் முரளி ஆகியோர் தனியார் பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com